
KDK சகாப்தம்
K.D.KothandaRama Raja
Born on 21/Mar/1939


Married on 06/Sep/1962
Wife: K.D.K.SeethaKalyani

@ His Brought-Up Place: 04-May-2024

Random Pictures - Family Union
Parents
Mother: K.D.Thayammal
Father: Freedom Fighter Thiru K.V.DesinguRaja


Father: Thiru K.V.DesinguRaja with Jawaharlal Nehru Ji

Father: Thiru K.V.DesinguRaja with P.S.Kumarasamy Raja
Father: Currently Honored @ Virudhunagar Collector Office


Mother Random Picture

Siblings
Eldest Brother: Thiru.K.D.BalaRama Raja
His Wife: K.B.Vajuram


Elder Brother: Thiru.K.D.RaghuRama Raja
His Wife: K.R.Saroji
Younger Brother: Thiru.K.D.RamaRaj

Younger Sister: Tmt.S.S.RamaLakshmi
Her Husband:Captain.Singaraja

Youngest Brother: Thiru.K.D.SivaRama Raja
His Wife: K.S.JeyaRohini

Heartfelt Letter from SDS
To Our KDK Bediya!
அன்புள்ள பெரியப்பா,
வணக்கத்துடன் வாழ்த்து மடல். நாங்கள் அனைவரும் ஒன்றாக கூடி இருக்கும் இந்த
தருணத்தில் எங்கள் சிறு வயது ஞாபகங்களை பற்றி அப்பா, அம்மா, குழந்தைகளுடன்
பேசிக்கொண்டிருந்தோம். எங்களின் எல்லா தருணங்களிலும் உங்களை நாங்கள் வியந்து
பார்த்துக் கொண்டிருக்கிறோம். விளையாட்டு மட்டுமே புரிகின்ற சிறு வயதில் தோன்றாத
உணர்வுகள் நாங்கள் பெற்றோர் ஆன பின்பு புரிகின்றது.
நம் உறவுகள், அதிலும் நம் நலம் மட்டுமே பெரிது என நினைக்கின்ற அப்பா (பெரிய அப்பா)
கிடைப்பது எவ்வளவு பெரிய வரம் என தற்போது நாங்கள் உணர்கிறோம். நீங்கள் எங்கள்
நலனை மட்டுமே நினைத்தது, உங்களின் கம்பீரம், நீங்கள் வகித்த பதவிகளின்
முக்கியத்துவம்—all of these are things we are reminiscing about now with our father of our family.
உங்களின் வெற்றிகளையும் அந்த வெற்றிக்கான பயணங்களையும் நினைவுகூர்ந்து
மகிழ்கிறோம். எங்கள் ஞாபக அடுக்குகளில்,.. நீங்கள் சத்ரிய வம்சத்தில் தியாகி K.V. தேசிங்கு
ராஜா மற்றும் திருமதி K.D. தாயம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்து, திருமதி சீதா கல்யாணி
அவர்களின் வாழ்வாதரமாக, ஒரு ராஜாவின் ஆளுமையோடு வலம் வந்த நாட்களும், உங்கள்
கம்பீரமும், உங்களின் கடின உழைப்பால் நீங்கள் கடந்து வந்த பாதையும், உங்கள்
உடன்பிறப்புகளிடமும், உறவுகளிடமும், நண்பர்களிடமும், நீங்கள் உண்மையான
அக்கறையும், மறைமுகமாக காட்டிய பாசமும் நினைவில் நிற்கின்றன.
உங்கள் பாசத்தை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் நீங்கள் காட்டியதை நாங்கள்
உணர்ந்திருக்கிறோம், பெரியப்பா.
எங்களின் அந்த புரிதலால் தான் இன்று மகிழ்ச்சியோடு இந்த கடிதத்தை எழுதிக்
கொண்டிருக்கிறோம் நாங்கள்.
எங்களுக்கு இன்னும் ஒரு முறை எங்களின் குழந்தை பருவத்திற்கு சென்று உங்களை ரசிக்க
வேண்டும் போல் இருந்தது. கண்ணில் இருந்து வரும் ஆனந்தக் கண்ணீரை பார்த்து, மனது
ஏக்கமாக திரும்பவும் குழந்தைகளாக மாறி அதை அனுபவிக்க கேட்கிறது, பெரியப்பா.
"யார் என்ன சொன்னாலும், யார் என்ன செஞ்சாலும், சொந்தமும் பந்தமும் கூட வரும்."இந்த
பாடலைக் கேட்கும் பொழுது எங்களை அறியாமல் கண்கள் கலங்குகிறோம். அதிலும் இந்த
பாடலில் வரும்: "இந்த குடும்பம் ஒரு கோவில், அது நீதானே சாமி. இங்கு நினைவுகள் பல கோடி, ஆனால்
நீதானே பூமி."இந்த வார்த்தைகள் உங்களுக்கானது, பெரியப்பா.
இன்று எங்களிடம் இருக்கும் நேர்மையும், உண்மையும், உழைப்பும், நாங்கள் உங்களையும்,
எங்கள் பெற்றோர்களையும், பார்த்து கற்றுக் கொண்டது. உங்களின் மதிப்பும், குடும்பத்தின்
மரியாதையும் கெடாமல் நடந்து கொள்ள வேண்டும் என நேர்மையுடனும் உண்மையுடனும்
வாழ கற்றுக் கொண்டோம்.
நீங்கள் எங்கள் ஹீரோ, ரோல் மாடல், பெரியப்பா. எங்களின் வாழ்க்கையில் நாங்கள் வாழ
வேண்டிய முறைகளை வார்த்தைகளில் கூறாமல் வாழ்ந்து காட்டியவர் நீங்கள். எவ்வளவு
செல்வம் இருந்தாலும் நீங்கள் அக்கறையோடு செலவு செய்வதையும் பிறருக்கு உதவும் உங்கள்
குணமும் எங்களை வியக்க வைத்தது.
உங்களிடம் உள்ள பயம் காரணமாக உங்களை எட்டி நின்று ரசித்த நாங்கள், பெரியம்மாவுடன்
ஒட்டி நின்றோம். இன்றும் உங்களைப்போல் நாங்களும் பெரியம்மாவை நினைத்து
கொண்டிருக்கிறோம். என்றும் அவருடன் நாங்கள் இருந்த, செலவிட்ட தருணங்களை
பாதுகாப்போம்.
உங்களின் பெயர் ஒற்றுமை காரணமாக சிறு வயதில் நாங்கள் பேசிக்கொள்வோம்: ராமரும் (கோதண்டராமா)சீதையும் (சீதா கல்யாணி) இவர்கள்தான் என! பெரியம்மாவுடன் பேசி விளையாடிய யாவும் எங்களிடம்
என்றும் பொக்கிஷமாக இருக்கிறது.
சுய சம்பாதியத்துடன் வசதியாக செல்வ செழிப்போடு, கம்பீரமாக நீங்கள் வாழ்ந்த
வாழ்க்கையும், உடன்பிறந்தவர்கள் குடும்பங்களுக்கும், உறவினர், நண்பர்கள் என
அனைவருக்கும் அச்சாணியாய், உறுதுணையாய், உங்களின் அடையாளத்தை
கொடுத்திருக்கிறீர்கள்.
உங்கள் உடன்பிறந்தவருக்கு மட்டும் அல்லாது பெரியம்மாவின் உடன்பிறந்தவர்களுக்கும்
அவர்கள் எல்லோரின் வாரிசுகளுக்கும் ஒரு ஹீரோவாய், முன்மாதிரியாய் இருந்து அனைத்து
உதவிகளும், பொருள்களும், செல்வங்களையும், உங்களின் மேலான நற்பெயரையும் சமமாக
பகிர்ந்து அதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடைந்திருக்கிறீர்கள்.
பெரியப்பா, உங்களுக்கு உங்கள் வயதில் மட்டுமின்றி அனைத்து வயதினருடனும் நட்பு
இருக்கிறது. அதற்கு உங்களின் உதவும் குணமே காரணம். இப்படி குடும்ப வாழ்க்கை
மட்டுமின்றி பொதுவாழ்விலும், தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சிங்க ராஜா
கோட்டையிலும் சிம்மமாக ராஜூக்கள் சமூகத்திற்கு கோட்டைத் தலைவராக 12 வருடங்கள்
இருந்து பல நிகழ்வுகளுக்கும், விசேஷங்களுக்கும் முன் நின்று தலைமை ஏற்று நடத்துவதும்
தீர்வு வழங்குவதும், தர்ம காரியங்கள் நடத்தி வைப்பதும் என பல நற்காரியங்களை செய்து
இருக்கிறீர்கள்.
மூன்று முறை ராஜபாளையம் நான்கு கோட்டை தலைவராகவும் நிறைய பணிகளை சிறப்புடன்
செய்திருக்கிறீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி உறுப்பினராகவும் அரசியல்
வாழ்விலும் மக்களுக்கு சில நன்மைகள் செய்துள்ளீர்கள்.
28 ஆண்டுகள் பெரிய கொட்டு முக்கலூர் தாயாதி தலைவர் எனும் பெரிய பொறுப்புகளை
சுமந்தது மட்டுமின்றி, உங்களின் சுய தொழில் மற்றும் வியாபாரத்திலும் வெற்றிகரமான
வளர்ச்சியும் அதன் சங்கங்களிலும் உங்களின் யோசனைகள், ஆதிக்கம், ஆளுமை,
ஆலோசனை என புரிந்த பதவியும் செய்த சேவையும் எண்ணில் அடங்காதவை.
மாசி மாத திருவிழாவின் போது சொக்கநாதர் மீனாட்சி கடவுளும் உங்களைத் தேடி வருவதும்,
நீங்கள் கடவுளுக்கு செய்யும் மரியாதையும், அந்த தெரு மக்களையும் பெருமை கொள்ள
வைத்திருக்கிறது.
இன்றும் இந்த வயதிலும் உங்களின் ஆரோக்கியமும், கம்பீரமும், ஆளுமையும் தொடர்கிறது
என்பது எங்களுக்குள் பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கிறது.
நாங்களும் எங்கள் சந்ததிகளுக்கு இவ்வாறான உணர்வை கொடுக்க வேண்டும் என்று
தோன்றுகிறது. உங்களின் வாழ்க்கையை இன்றும் நாங்கள் நினைவுகூர்ந்து உங்களை
எங்களின் பொக்கிஷமாக உணர்கிறோம்.
வாழ்த்த வயதில்லை… வணங்குகிறோம்.
என்றும் கடவுளை பிரார்த்திப்போம் உங்கள் ஆரோக்கியத்திற்கு.
என்றும் உங்கள் ஆசியுடன்,
